தமிழ் நாடு +2 தேர்வு முடிவுகள் வெளியான நாள். மாணவர்கள் வாழ்க்கையை முடிவு செய்யும் நாள். மாணவர்கள் ஆர்வத்தோட இருந்தாங்க. ஆனா வந்த மார்க் அவங்க சந்தோஷத்த ரொம்ப நேரம் நீடிக்கல. சிலருக்கு எதிர்பார்த்ததைவிட அதிக மார்க் வந்து இருந்திச்சு. ஆனா சில பேருக்கு அவங்க நினைச்சத விட மிக குறைந்த மார்க் தான் வந்தது.இந்த எக்ஸாம் ல மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற்றவர்கள் நான்கு பேர்.
அவங்க எடுத்த மதிப்பெண் 1183/1200. அவங்களுக்கு பள்ளி முதல் முதல்வர் அமைச்சர் வரை எல்லோரும் பரிசு கொடுத்து பாராட்டினாங்க.
ஆனா இப்போ விடை தாள் மறு மதிப்பீடு செஞ்சதுக்கு அப்புறம் சிவகங்கை மாவட்டத்தை சார்ந்த பாலமுருகன் என்கிற மாணவனுக்கு தமிழ் பாடத்துல 8 மதிப்பெண் வந்திருக்கு. இதனால அவனோட மொத்த மதிப்பெண் 1184 ஆகிடுச்சு. இப்போ அந்த மாணவன் தான் மாநிலத்தில் முதல் மாணவன். இது அந்த மாணவனுக்கு இன்ப அதிர்ச்சியா இருந்திருக்கும். ஆனா இது வரை முதல் இடத்தில் இருந்த அந்த நான்கு மாணவர்களின் மனம்....?
ஒரு பாடத்தில் ஒரு மாணவன் மறு மதிப்பீட்டில் 8 மதிப்பெண் பெறுகிறான் என்றால் அவன் தாளை முதலில் திருத்திய ஆசிரியர் எவ்வளவு கவன குறைவாக திருத்தி இருக்க வேண்டும்.
சரி, இது மொழிப்பாடம். மாணவனது கட் ஆப் மதிபெண்களை பாதிக்காது என்று சமாதானம் கூறி விடலாம். ஆனால் அண்ணா பல்கலைகழகத்திற்கு பள்ளிகல்வி துறை அனுப்பிய சுற்றறிக்கையில் 1300 மாணவர்களின் கட் ஆப் மதிப்பெண்கள் மாறி உள்ளதாக கூற பட்டுள்ளது.
இதில் கொடுமை என்ன என்றால், கட் ஆப் மதிப்பெண் கணிக்கிடப்படும் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களை ஒவ்வொரு தாளையும் மூன்று ஆசிரியர்கள் மதிப்பீடு செய்கிறார்கள். மூவரின் பார்வை பட்டும் 1300 பேருக்கு மதிப்பெண் குறைவாக அளிக்கப்பட்டது எப்படி?
ஆசிரியர்கள் விழிப்புடன் இருந்தால் இந்த தவறுகள் நடைபெறுமா? இது மாணவர்களின் வாழ்க்கை என்பதை கூடவா ஆசிரியர்கள் மறந்து விட்டார்கள்?
இதில் மற்றொரு கொடுமை ஒரு தாளுக்கு ஒரு மாணவன் மறு மதிப்பீடு செய்ய விண்ணப்பம் செய்ய வேண்டும் என்றால் முதலில் அந்த தாளுக்கான விடை தாள் நகல் ரூபாய் 275 கட்டி பெற வேண்டும். மேலும் மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்ப கட்டணம் ரூபாய் 505 கட்ட வேண்டும்.
1300 பேர் முக்கிய பாடங்களில் மட்டும் மதிப்பெண் கூடுதலாக பெற்று இருக்கிறார்கள் என்றால், குறைந்தபட்சம் 2000 பேர் விண்ணப்பம் செய்து இருப்பார்கள். அதாவது 2000 x 775 = 1550000. பதினைந்து லட்சம் என்பது அரசை பொறுத்த வரை ஒரு சிறு தொகை போல தோன்றும். ஆனால் என்னை போன்ற மாணவர்களுக்குத்தான் அது எத்தனை பெற்றோரின் ரத்தம் என்பது தெரியும்.
முதலிலேயே ஆசிரியர்கள் சரியாக திருத்தி இருந்தால் மாணவர்களுக்கு இந்த செலவும் அலைச்சலும் இருந்திருக்காதே? இப்படி திருத்துவதற்கு சம்பளம் போதவில்லை என்று சில இடங்களில் போராட்டம் வேறு.....
தமிழ் தேசத்தின் ஆசிரியர்களுக்கு ஒரு ராயல் சல்யூட்.....




1 கருத்துகள்:
இப்போது உள்ள வாத்தியார் எல்லாம் ரெம்ப மோசம், அதனால் தன யாரும் மதிக்க மட்டங்கிரர்கள் :). ஆனால் நல்ல ஆசரியர்களும் இருக்கிறார்கள்
Post a Comment