
மேட்ச் ஆரம்பிக்கும் முன்னாடியே தன்னோட வேலைய ஆரம்பிச்சுருச்சு மழை. போட்டி நடக்கும் போதும் நடுவுல அப்போ அப்போ வந்து பூச்சாண்டி காட்டிட்டு போச்சு. ஆனா இது எதுவும் ஒரு விறுவிறுப்பான ஆடாத பாதிக்கலை.
வழக்கமா பேட்டிங் எடுக்கற டோனி நேத்து டாஸ் ஜெயிச்ச உடனே பௌலிங் போடறோம்னு சொல்லிட்டார். சரி என்னதான் நடக்கும்னு பொறுத்திருந்து பார்ப்போம்னு பார்த்தேன்.
கெயில் வழக்கம் போல வானவேடிக்கை காட்ட ஆரம்பிச்சுட்டார். முதல் ஓவர்லையே பத்து ரன் எடுத்து அதிரடி ஆரபிச்சு வச்சார். நல்ல வேலையா நெஹ்ரா வந்து கெயில அவுட் ஆக்கிட்டாரு.
அதுக்கப்புறம் மேட்ச் முழுசா இந்தியா கைலதான். சர்வான் மட்டும் தனி ஆளா போராடி 62 ரன் அடிச்சார். கடைசில வெஸ்ட் இண்டீஸ் அவங்களுக்கு கிடைச்ச 27 ஓவர்ல 185 ரன் அடிச்சாங்க. நெஹ்ரா 3 விக்கெட் எடுத்து தான் இன்னும் முழு தகுதியோட தான் இருக்கேன்னு நிரூபிச்சிட்டார்.
அடுத்து வந்தாங்க நம்ம சிங்கங்கள். ஓவருக்கு 7 ரன்னுக்கு மேல தேவை பட்டுது. காம்பிர், கார்த்திக் ரெண்டு பெரும் பலமான அடித்தளம் கொடுத்தாங்க. அடுத்து டோனி வந்து தன்னோட வழக்கமான ஆடாத ஆட இந்தியா வெற்றி ரொம்ப எளிதுன்னு எல்லோரும் நினைச்சாங்க. ஆனா யுவராஜும் ரோகித் ஷர்மாவும் அடுத்து அவுட் ஆக, கொஞ்சம் டென்ஷன் ஆச்சு.
கடைசி ஓவர். வெற்றி பெற 11 ரன் தேவை. களத்தில் பதான், டோனி. முதல் பந்து. பதான் ஒரு ரன். டோனி களத்தில். டைலர் பந்து வீசுகிறார். புல் டாஸ் பந்து. மிட் விக்கெட் திசையில் தூக்கினார் டோனி. அது ஒரு சிக்ஸ். நடுவர் டுன்கன் இரு கைகளையும் மேலே உயர்த்த ஆர்பரித்தது இந்தியா.
அடுத்த மூன்று பந்தில் நான்கு ரன் எடுத்து ஒரு பந்து மீதம் இருக்க வெற்றி இலக்கை எட்டியது இந்திய அணி. ஆட்டம் இழக்காமல் 46 ரன் எடுத்த டோனி ஆட்ட நாயகனாக தேர்வு செய்ய பட்டார்.
வெஸ்ட் இண்டீஸ் 185/7 (27)
சர்வான் - 62
கெயில் - 27
நெஹ்ரா - 3/21
இந்தியா 159/4 (21.5)
கார்த்திக் - 47
டோனி - 46*
பெர்னார்ட் - 1/21
இந்தியா 6 விக்கெட் வித்யாசத்தில் வெற்றி (டக்வொர்த் - லூயிஸ் விதி )




2 கருத்துகள்:
எனக்கும் கிரிக்கெட் பிடிக்கும்.தங்கள் பதிவுகளில் கிரிக்கெட் மட்டும் இடம்பெற்றிருப்பது மகிழ்ச்சி.!
தங்கள் பின்னூட்டதிற்கு நன்றி ராம்
Post a Comment